Total Pageviews

Sunday, March 30, 2014

ராமரின் மூல உபதேசம் என்ன?



திரேதா யுகத்தில்--10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் பலதார & பலபுருஸ திருமண வாழ்வில் இருந்தனர்! பக்கத்து ஊர் மீது படையெடுத்து ஆண்களை கொண்று விட்டு பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாகவும் ஆடுமாடு செல்வங்களையும் கொள்ளயடித்து கொண்டுவருவது வீரம் என புகழபட்ட காலம்! சுக்ரீவனின் மனைவியை வாலி வைத்து கொண்டதற்காக ராமர் வாலியை கொண்றார்! அப்பொது வாலி ``ராமா இது எங்களுக்கு தர்மம் `` என்று சொல்லவில்லையா?


பலதார & பலபுருஸ திருமண வாழ்வில் இருந்த மனித சமுதாயத்திற்கு ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கையை கடவுளின் தூது செய்தியாக கொணர்ந்தவர் ராமரே!!அதற்காகவே அவர் பலமுறை இன்னலடைந்தார்!


இதற்கு ராமர் செலுத்திய விலை; விலை மதிப்பில்லாத தனது இளமையை--இளம் மனைவியை பிறிந்து வாடியது! தனது மனைவியையும் வாட்டியது!

1) தன்னை அழைத்த சூர்ப்பனகையின் இச்சையை தீர்க்க ராமர் மறுத்ததால் திருமனமாகி ஓராண்டிற்குள் சீதை ராவணனால் தூக்கி செல்லபட்டார்!!அதனால் இளம் மனைவியை பிறிந்தே வாடினார்!! அவர்களை மீட்ட தேடி அழைந்தார்!! மீட்டு கொண்டு அயோத்தி சென்றாலும் குடிமக்களின் அவதூறு பேச்சுக்காக மீண்டும் மனைவியை பிறிந்தே வாழ்ந்தார்!! ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கையை நிலைனாட்ட அவர் சில ஆண்டுகள் மட்டுமே இல்லற சுகத்தை அணுபவிக்க முடிந்தது! உலகமே சிற்றிண்பத்தில் பலதார --பலபுருஸ சுகத்தில் மூழ்கி திளைத்த போது ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கைக்காக அந்த சுகத்தை தியாகம் செய்ய வேண்டிவந்தது!!

2) கடவுள் சிலரை ராஜாக்களாக உயர்த்தி வைக்கிறார்! அந்த பதவியை அடைந்தவர்கள் தங்களிடம் உள்ள பதவியையும் அதிகாரத்தையும் தங்கள் இஸ்ட்டம் போல பயன்படுத்தி கடவுளின் சொரூபங்களான மனிதர்களை அடக்கி ஒடுக்கி ஆணவமாய் வாழதொடங்குகின்றனர்!! எங்கெங்கும் சர்வாதிகாரிகளாய் மனிதர்கள் மாறிவிடுகின்றனர்! ``சொன்னதை செய் சொன்னதை செய் சஸ்பெண்டு செய்வேன் என கண்ணை மூடிக்கொண்டு மிரட்டுவதை தான் நிர்வாகம்`` என்பதாக IAS IPS Acadamy களிலும் கற்று கொள்கின்றனர்! மிறட்டுவது தான் திறமையான நிர்வாகி எனவும் அவர்களின் முன்னால் கூணிகுருகுவது போல நடித்து விட்டு அவர்கள் போனதும் அவன் கிடக்கிறான் நாதாரி என திட்டி விட்டு அரைகுறையாக வேலையை செய்வதும் அரசுதுறைகளில் செயல்பாடாக போய்விட்டது!!

பதவிகளை அணுபவிக்கும் அளவு அந்த பதவிகளின் செயல்பாடுகளில் கர்மயோகம் வெளிப்படுவதில்லை! பதவியை கொடுத்த கடவுள் அதை எப்படி பயன்படுத்தவும் விட்டுவிடுகிறார்; ஆனால் நியாயதீர்ப்பு நாளன்று அவரிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற உணர்தல் மனிதர்களிடம் இல்லை! அதிகாரிக்கு தனது கீழ் உள்ளவர்களை ஆட்டிபடைக்க அதிகாரம் உள்ளது ஆனால் தனக்கும் மேலான அதிகாரி கடவுள் என்கிற உள்ளார்ந்த பயம் இல்லாமல் துஸ்பிரயோகம் செய்யும் போது அவன் அரக்கனாகிறான்!!

ஒரு அதிகாரி முதலில் தனக்கு கீழ் உள்ளவர்களின் கஸ்ட்டனஸ்ட்டங்களை கருத்துகளை காது கொடுத்து கேட்க உள்வாங்க தெறிந்திருக்க வேண்டும் !! கீழ்மட்ட அணுபவங்களை ஜனநாயகமாய் உள்வாங்கி முடிவெடுத்து அதை அமுல்படுத்தும் போது சர்வாதிகாரியை போல அமுல்படுத்த வேண்டும்!அமுல் படுத்தும் போதே கீழுள்ளவர்களின் அணுபவங்களை உள்வாங்க வேண்டும்!! மாற்று கருத்துகளை பேச அணுமதிக்க வேண்டும்! சாதக பாதக அம்சங்களை நடுனிலையோடு சீர்தூக்கி பார்த்து முடிவெடுக்க வேண்டும்! பெரிய பாதிப்பில்லாத மாற்றுகருத்துள்ளவர்களை அரவணைத்து போகும் பக்குவமுள்ளவனே வெற்றிகரமான தலைவனாய் பரிணமிக்க முடியும்!

லெனின் கூட முடிவெடுக்கும் பொது உட்கட்சி ஜன நாயகம் இருக்க வேண்டும் செயல்படுத்தும் போது அந்த முடிவை சர்வதிகாரமாய் செயல்படுத்த வேண்டும் என்றார்! அவர் அப்படி பட்டவராய் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது !ஆனால் பதவிக்கு வந்ததும் மாற்றுகருத்து உள்ளவர்கள் அனைவரையும் ஸ்டாலின் கொன்றொளித்து ஆமாம்சாமிகளாய் சேர்த்து வைத்து இதன் பேர் ஒற்றுமை என்றார்! அறிவாளிகள் ஒழிக்க பட்டு அடிவருடிகளும் ஆமாம்சாமிகளுமாய் பதவிக்கு வந்து சில நாளில் முழு சோவியத்கூட்டமைப்பும் அக்கு வேராய் ஆணிவேராய் சிதறிவிட்டது!


இறைதூதர் ராமர் தன்னிஸ்டம் போல செயல்படுவது அரசனுக்கு அழகன்று நாளும் குடிமக்களின் கருத்தை அறிந்து சாதக பாதக அம்சங்களில் நீதியோடு நடுனிலை தவராமல் ஆட்சி செய்ய வேண்டும் என்கிற ராஜ நீதியை சொன்னவர்! வழக்கு உள்ளவர்கள் --பாதிக்க பட்டவர்கள் இரவுபகல் எந்த நேரமும் தன்னிடம் வருவதற்கு வசதி உண்டாக்கியவர்! குடிமக்களின் இன்னல்களை போக்குவதுதான் அரசனின் தலையாய கடமை அதை செய்வதற்கு அரசனுக்கு தூக்கம்-- ஓய்வு நேரம் தடையாய் இருக்க கூடாது என்றார்! அவரது சபையின் ஆராய்ச்சி மணி என்னேரமும் திறந்து வைக்க பட்டது! பொது மக்களின் கருத்தை அறிய அவர் தமது அதிகாரிகளை மட்டும் நம்பாமல் தானே மாறு வேடத்தில் குடிமக்களோடு கலந்து உறைவார்!


பொது மக்களுக்கு அப்பற்பட்ட அரச நீதி அவன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட முன்னுதாரனமாய் வாழ வேண்டும் என்பதற்காக மீண்டும் சீதையை வணவாசத்திற்கு அணுப்பி விட்டு பிரமசாரியாகவே வாழ்ந்தார்!! ``மக்களுக்காகவே அரசன்!! அரசனுக்காக மக்கள் அன்று!!`` என்கிற ராஜ நீதியை வாழ்ந்து காட்டினார்! ஒரு அரசன் லோகங்களுக்கெல்லாம் அதிபதியாகிய கடவுளுக்கு பயந்து அவரது ராஜ்ஜியத்தில் தான் ஒரு அதிகாரி என்கிற கர்மயோகத்தில்--ராஜரிஸியாய் வாழவேண்டும் என்பதான கடவுளின் தூது செய்தி ராமர் மூலமாக வெளிபடுத்த பட்டது!


திரேதா யுகம் என்பது ஆதி மனித சமூகம் ! முதல் மனிதனான சிவன் படைக்கப்படும் போது தேவதுதனாக படைக்கப்பட்டு பின்னாளில் பூமிக்கு அனுப்பப்பட்டவர்


சரீரமான சகலவற்றிற்கும் தந்தை சிவனே  ! அவர் சதா தியானிக்கிவராகவே இருந்தார் ! ஏக இறைவனை பிரார்த்தித்து அவரை அடையும் பக்தியோக மார்க்கத்தின் குருவாக - தட்சினாமூர்த்தியாகவே தன்னை அறிவித்துக்கொண்டார் - ஆதி சித்தர் அவரே - சரீரங்களில் செய்யப்படும் சகல யோகங்களுக்கும் அவரே சற்குருவானவர்




ஆதிமனிதர்கள் --தமிழர்களிடம் ஒரு பரவலான பழக்கம் !ஆங்காங்கே குடி பெயர்ந்து சென்று அங்கே நிலைத்து பெருகும் போது பேர்சொல்லும் படி வாழ்ந்த தங்கள் மூதாதைக்கு அவ்விடத்திலே குலதெய்வ வழிபாடு செய்வார்கள் !அதை மைய படுத்தி தங்களை ஒரு புதிய குலமாகவும் அறிவித்து கொள்வார்கள் !

ஒரு சாதனையாளர் அல்லது ஞானி ,முனிவர் ,சித்தர் அடங்கினால் அந்த சமாதியின் மேல் ஒரு லிங்கம் வைத்து அவர் பெயரோடு ``ஈஸ்வரன் `` என சேர்த்து அதை கோவிலாக்கி வழிபடுவார்கள் !அதன் அர்த்தம் இவரும் கடவுளுக்கு இணை ஆகிவிட்டார் என்பதுதான் !!அகத்தியர் அடங்கிய இடம் அகத்தீஸ்வரம் ; கும்ப முனி அடங்கிய இடம் கும்பேஸ்வரம் இப்படி தமிழகத்தில் பல கோவில் ஸ்தல வரலாறுகள் உள்ளன !


அத்தோடு திரேதா யுகத்தில் அசுரர்கள் மனித பெண்களை திருமணம் முடிப்பது தடை செய்ய படாததால் இவர்களால் ``அரக்கர்கள் `` --மிக பலம்வாய்ந்த மனிதர்கள் உருவானதாக யூதர்களின் வேதத்தில் குறிப்பிட பட்டுள்ளது !நமது புராணங்களிலும் தவம் இருந்து வரம் வாங்கி அனேக அசுரர்கள் பிறந்து பூமியை ஆண்டு கொடுமை படுத்திய வரலாறுகள் உள்ளன !

இப்படி உருவான அரக்கர்கள் குலம் இலங்கையில் இருந்திருக்க வேண்டும் !கலியுகத்தில் கலிங்கத்திலிருந்து நாடுகடத்தப்ட்டு வந்த விஜயன் இந்த அரக்கர் குல பெண்மனியோருவருடன் சேர்ந்தே சிங்களவர்கள் உண்டானார்கள் ! இப்படி தவம் செய்து வரம் பெற்று தங்களை கடவுளுக்கு இணையாய் அறிவித்து கொண்டவர்களும் தங்கள் பெயருடன் ஈஸ்வரன் என சேர்த்து கொள்ளும் வழக்கின் படி ராவணனும் இலங்கையில் ஒரு பலம் வாய்ந்த பேரரசை நிறுவி தன்னை ராவணேஸ்வரன் என அழைத்து கொண்டிருக்க வேண்டும் !

தியானம் ;தவம் ; யோகங்கள் மூலமாக சரீரத்தில் பல சித்துக்கள் கைகூடியவுடன் அதனால் தன்னை ஈஸ்வரன் என அழைத்துக்கொண்டு ; பூமியில் கொடுமைகள் செய்வது அல்லது கடவுளை மறுத்து பக்தர்களை - நல்லவர்களை கொடுமை செய்வது என்ற ஆணவ போக்குகள் தலை தூக்கியத்தை அழித்து மீண்டும் பக்தி நெறியை ஸ்தாபிக்கவே - கடவுளை சற்குரு நாராயணன் மூலமாக வழிபடும் தூய வைணவ நெறியை ஸ்தாபிக்கவே ராமர் பூமியில் அவதரித்தார்
 

அவரின் ஆன்ம வாழ்வுக்கான உபதேசங்கள் மிகவும் அழகியவை யோகம் பயில்வோர் அவசியம் கற்கவேண்டியவை

அவர் அரசாட்சியை துறந்து கானகம் செல்லும் போது பின் தொடர்ந்த பரதனை திருப்பி அனுப்பி  அவனுக்கு உபதேசித்த போது இவை உபதேசிக்கப்பட்டன
 

ராம கீதை என அழைக்கப்படும் இவ்வுபதேசங்களை தொடர்ந்து கீழே படியுங்கள்  :


நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் !



ஓரிறைவனையே துதிக்கிறோம்

நாராயணன் நாமத்தினாலே    

ஓம் நமோ நாராயணா !!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி